அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

" alt="" aria-hidden="true" />

 


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கிங் கவுண்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் சினோஹோமிஷ் கவுண்டியைச் சேர்ந்தவர். 


 

கொரோனா தாக்கம் அதிகரித்ததால், கிங் கவுண்டியில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று மாநில கவர்னர் கூறியுள்ளார். 

 

கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கான விமான பயண கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும், அவர்கள் புறப்படும் விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

 


Popular posts
2000 பேருக்கு கபசுர கசாய குடிநீர் 500 பேருக்கு முக கவசம் கை உரை மற்றும் குடிநீர் பாட்டில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மும்பை அர்ஜுன்
Image
ப.சிதம்பரம் ஜாமின் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை
Image
விழுப்புரம் மாவட்டம் அருகே மடப்பட்டு என்ற இடத்தில் சமூக ஆர்வலர் பரிக்கல் குலாம்நபி,ஆசாத் தலைமையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உணவு மற்றும் குடிநீர் வழங்கினார்
Image
திருப்பதி ஏழுமலையானை தினமும் விஐபி திட்டத்தில் தரிசிக்க வாய்ப்பு: தேவஸ்தானம் திட்டம்