" alt="" aria-hidden="true" />
என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக்
நிறுவன தலைவர் வி.எம்.எஸ். வெளியிட்டுள்ள அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ என்பிஆர் என்ஆர்சி ஆகிய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம் போராட்டம் மனித சங்கிலி தர்ணா போராட்டம் என பல வடிவங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இஸ்லாமியமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்.பி.ஆர். என்.ஆர்.சி யை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை பல்வேறு கட்சியினர் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து வலியுறுத்தியிருந்தது.
டில்லியின் சான்பாக் பகுதியில் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக கடந்த 2 மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை முதல்வர் இருமுறை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அதில் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு பரிசீலித்து இருப்பதாக தெரிவித்த நிலையில் என்.பி.ஆர் லிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசியிருந்தாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இஸ்லாமிய பெண்கள் மட்டுமில்லாது தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று இரவு தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து சட்டமன்றத்தில் தமிழகஅரசு கொண்டு வரவுள்ள
தமிழக அரசின் இந்த முடிவுக்கு முட்டு கட்டை போடும் வகையில் என்பிஆர் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு முட்டு கட்டை போட்டுள்ளதாக தெரிகிறது. இது வருத்த அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு செவிசாய்க்காமல் இனியும் காலம் தாழ்த்தாமல் என்.பி.ஆர்.க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் எனறு கூறி உள்ளார்.